யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் குடும்பத் தலைவரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்றிரவு பருத்தித்துறை அல்வாய் மகாத்மா வீதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அப் பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய கந்தசாமி என்ற நபரே தலையில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.சம்பவத்தின்போது காயமடைந்தவரின் வீட்டுக்கு மோட்­டார் சைக்­கிளில் வந்த 3 பேருக்­கும் மேற்­பட்­ட­ கும்­பலொன்றே வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லையெனவும் மேலதிக விசா­ரணைகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.