சீனவின் பாதுகாப்பு அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

தனது 21 உயர்மட்ட அங்கத்தவர்களுடன் இலங்கைக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சினாவின் பாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவான், இங்கிருந்து நேபாளத்திற்கும் தனது குழுவினருடன் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலங்களில் சீனபாதுகாப்பு அமைச்சர் சங் வன்குவான், அரச அதிகாரிகள், உயர்மட்டத் தலைவர்களையும் குறிப்பாக இராணுவ அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதேவேளை, இரு நாட்டு இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதே சீன பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவரது உயர்மட்டக்குழுவின் முக்கிய நோக்கமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.