திருகோணமலை, கிண்ணியா பகுதியில் 3 நாட்களாக மூடப்பட்டிருந்த 66 பாடசாலைகளை இன்று திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எம். அஹமட் லெப்பை தெரிவித்துள்ளார்.

குறித்த 66 பாடசாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்திருந்ததால் குறித்த பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.