ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன அமைச்­ச­ராக இருந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பொலன்­ன­று­வையில் வைத்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்­டி­யமை தொடர்பில் தண்­டனை விதிக்­கப்­பட்ட, முன்னாள் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்க உறுப்­பினர் சிவ­ராஜ் ஜெனீவன் அல்­லது சென­னுக்கு ஜனா­தி­பதி மன்­னிப்பு வழங்­க­வுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

10 ஆண்­டுகள் சிறைத்­தண்­ட­னையை எதிர் நோக்­கி­யுள்ள ஜெனீவன் தாக்கல் செய்­துள்ள மேன் முறை­யீட்டு மனுவை வாபஸ் பெறு­வது குறித்த இடை­யீட்டு மனு­வொன்­றின் விசாரணை நேற்று இடம்பெற்றபோதே இந்த விடயம் தெரியவந்­தது.

பொலன்­ன­றுவை - மன்­னம்­பி­டிய பகு­தியில் வைத்து, குறித்த நபர் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து மைதி­ரி­பால சிரி­சே­னவை கொலை செய்ய திட்டம் தீட்­டி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு அது சாட்­சி­களின் அடிப்­ப­டையில் உறுதி செய்­யப்­பட்­டது.

இது தொடர்பில் குற்­ற­வ­ளி­யாக காணப்­பட்ட பிர­தி­வ­திக்கு 10 வரு­டங்கள் சிறை­தண்­டனை மற்றும் பத்­தா­யிரம் ரூபா அப­ராதம் விதித்து மேல் நீதி­மன்ற நீதி­பதி அமேந்­திர சென­வி­ரத்­னவால் தீர்ப்பு அறி­விக்­கப்­பட்­டது.

பின்னர் இந்த தண்­ட­னையை எதிர்த்து குற்­ற­வாளி தனது சட்­டத்­த­ரணி மூலம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்­த­நி­லையில் குறித்த மேன்­மு­றை­யீட்டை தள்­ளு­படி செய்ய அனு­ம­திக்­கு­மாறு கோரி பிர­தி­வாதி சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி நேற்று இடை­யீட்டு மனு­வூ­டாக கோரிக்கை முன் வைத்தார்.

குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வ­ருக்கு ஜனா­தி­பதி மன்­னிப்பு வழங்­க­வுள்­ள­மை­யா­லேயே இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­தாக இதன் போது தெரிவித்தார். இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம்இ பிரதிவாதியின் முறையீட்டை தள்ளுபடி செய்ய அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.