தனது 5 வயதான மகனை, நடு வீதியில் வைத்து கொடூரமான முறையில் கயிற்றினால் கட்டி கொடுமைப்படுத்திய தாயை பொலிஸார் தேடிவரும் சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

பேங்கொக்கிற்கு அருகிலுள்ள நொந்தபுரி மாகாணத்தின் பிரதான உணவு நகரத்தில், ஒரு தாய் தனது 5 வயதே ஆன மகனை கொடூரமான முறையில் தாக்குவதோடு, சிறுவனின் தலையை அழுத்தி, அவனால் மூச்செடுக்க முடியவில்லை என அலறிய போதும் கயிற்றால் கட்டி தண்டனை கொடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி வெளியாகியுள்ள நிலையில் குறித்த தயை தேடி வருவதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த தாய் மன இரக்கமின்றி சிறுவனை தாக்கி, கயிற்றில் கட்டியுள்ள சம்பவமானது, அத்தாயிற்கு இருதயம் இல்லை என்பதை உணர்த்துவதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த சிறுவன் தன்னால் மூச்செடுக்க முடியவில்லை என அறிவித்த நிலையிலும், அதை ஒருவர் படமெடுத்துள்ளதோடு, சிறுவனுக்கு உதவாமல் இருப்பது வேதனையான விடயமெனவும், இருப்பினும் குறித்த காணொளியை கொண்டு சம்பவம் இடம்பெற்ற பகுதியை அடையாளம் கொண்டுள்ளதோடு, தாயை தேடும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.