பாடசாலை மாணவர்கள் 19 பேர் பாடசாலை கட்டணத்தை கட்டவில்லை என்பதற்காக, பாடசாலை வகுப்பறையில் சிறைவைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஐதராபாத்தின் ஹயாத்நகர் பகுதியிலுள்ள, சரிதா வித்யாநிகேதன் பாடசாலையில் பாடசாலை கட்டணம் கட்டாத 5 முதல் 14 வயது வரையான 19 மாணவர்களை வகுப்பறைக்குள் அடைத்து சிறை வைத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மாணவர்களை பாடசாலையில் இடம்பெற்றுவந்த பொதுப்பரீட்சையிலும் பங்குபற்றட்டுவதற்கு தடைவித்துள்ளதுள்ளது சரிதா வித்யாநிகேதன் பாடசாலையில் பாடசாலை நிர்வாகம்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தை கேள்வியுற்ற குழந்தைகளின் பெற்றோர், பொலிஸில் அளித்துள்ள முறைப்பாட்டை தொடர்ந்து, மாணவர்கள் இரண்டு மணித்தியாலய சிறைவைப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

அத்தோடு மிகவும் கொடூரமான செயற்பாட்டை வெளிப்படுத்தியுள்ள குறித்தப்பாடசாலையின் நிர்வாகத்தினருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அம்மாநில குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, அளித்துள்ள முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.