எல்நினோவின் தாக்கத்தால் பெருவில் தொடர்ந்து 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெருவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்வேறு நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன.மேலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கால்நடைகள் அடித்துச்செல்லப்பட்டன. 12,000 பேர் வீடுகளை இழந்துள்ளதுடன், சுமார் 1,15,000 வீடுகள், 117 பாலங்கள் மற்றும் பல்லாயிரம் கிலோமீற்றர் நீளமான வீதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் பெருவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, அநேகமானோர் வீட்டின் கூறைமீது ஏறிநின்று உதவிக்காக காத்திருப்பதாகவும், 

இந்நிலையில் 1998ஆம் ஆண்டிற்கு பிறகு மிக மோசமான காலநிலை பிரச்சனையை எதிர்கொண்டுள்ளதாகவும், இராணுவத்தினர் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ஜனாதிபதி பெட்ரோ பப்ளோ குசான்ஸ்கி அறிவித்துள்ளார்.

பசிபிக் கடற் பிராந்தியத்தில் லிப் வெப்பம் அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்ட எல் நினோவின் விளைவுதான், கடும் மழை பெய்து வருவதாகவும், மேலும் அடுத்த வாரம் வரை மழை தொடருமென அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.