சோமா­லியா கடல் கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து இலங்­கை­யர்­களை மீட்­ட­மை­யா­னது அர­சாங்­கத்தின் இரா­ஜ­தந்­திர வெற்றி மாத்­தி­ர­மன்றி மாறாக இந்து சமுத்­தி­ரத்தின் இரா­ஜ­தந்­திர வெற்­றி­யாகும். இத­னை­யிட்டு அமெ­ரிக்­கா­விற்கு விசேட நன்­றி­யை தெரி­விக்கக் கட­மைப்­பட்­டுள்­ள­தாக பிர­தி­வெ­ளி­வி­வ­கார அமைச்சர் கலா­நிதி ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார்.

கடல் கொள்­ளை­யர்­களால் கடத்­தப்­பட்ட இலங்­கை­யர்­களின் விடு­தலை தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் ஊடக சந்­திப்பு நேற்று வெளி­வி­வ­கார அமைச்சில் இடம்­பெற்­றது.  

அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

சோமா­லிய கடல் கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து இலங்­கை­யர்­களை மீட்­ட­மை­யா­னது அர­சாங்­கத்தின் இரா­ஜ­தந்­திர வெற்­றியின் அடை­யா­ள­மாகும். ஹரிஸ் 13 என்ற எண்ணெய் கப்­பலை சோமா­லிய கடல் கொள்­ளை­யர்கள் கடத்தி சென்ற சந்­தர்ப்­பத்­தி­லி­ருந்து தேவை­யான அனைத்து நாடு­க­ளு­டனும் தொடர்புக் கொண்டு இரத்தம் சிந்­தாமல் கப்பம் வழங்­காது இலங்­கை­யர்கள் 8 பேரையும் காப்­பாற்­றி­யுள்ளோம். 

இது இலங்­கையின் இரா­ஜ­தந்­திர வெற்­றி­மட்­டு­மல்ல இந்து சமுத்­தி­ரத்தின் இரா­ஜ­தந்­திர வெற்­றி­யா­கவே இதனை  கருத முடி­கின்­றது. பூகோள இரா­ஜ­தந்­திர வெற்­றி­யு­மாகும். எதிர்­கா­லத்தில் கேந்­திர நிலை­ய­மாக இலங்கை உரு­வாக உள்ள சந்­தர்ப்­பத்தில் இவ்­வா­றான நெருக்­க­டி­யான சூழலில் அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றியம் மற்றும் பஹ்­ரேனை  தள­மாக கொண்டு இயங்கும் பசிபிக் இணைந்து கடல்சார் படை என்­ப­வற்­றுடன் எமது கடற்­ப­டையும் இணைந்து செயற்­பட கிடைத்­தமை முக்­கி­ய­மா­ன­தாகும் .

எவ்­வா­றா­யினும் சம்­ப­வத்தை ஆரம்­பத்தில் இருந்து கூற விரும்ப வில்லை. இறு­தியில் கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து இலங்­கை­யர்­களை எவ்­வாறு மீட்டோம் என்­பதை தெளி­வுப்­ப­டுத்­து­கின்றேன். 

துப்­பாக்கி பிர­யோகம் தொடர்பில் கேள்­விப்­பட்­ட­வுடன் கப்­பலில் இருந்த இலங்­கை­யர்­க­ளுடன் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேர­டி­யாக தொடர்பு கொண்டு நிலை­மை­களை கேட்­ட­றிந்தார். எங்­கி­ருந்து துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது என்­பது தெரி­ய­வில்லை. கப்­பலில் 70 கொள்­ளை­யர்கள் வரை இருப்­ப­தாக கூறி­னார்கள். 4 பட­குகள் சுற்­றி­வ­லைத்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டனர். 

இதன் போது நாம் முன்­னெ­டுத்த இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கை­களை வேறு கோணங்­களில் முன்­னெ­டுக்க வேண்­டிய அவ­சி­யத்தை உணர்ந்தோம். ஏனெனில் கடற்­படை 8 பேரை மீட்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்துக் கொண்­டி­ருக்­கையில் டுபாயில் உள்ள இலங்கை தூதுவர்  கடத்­தப்­பட்ட கப்­பலின் உரி­மை­யா­ளர்­களை சந்­தித்து பேசு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். அதே போன்று எத்­தி­யோப்­பி­யாவில் இருந்த எமது தூதுவர் ஊடாக சோமா­லிய அமைச்­சர்­க­ளுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி செயற்­பட்டோம். 

இந்­நி­லையில் திடீ­ரென துப்­பாக்கி பிர­யோகம் நடத்­தி­யப்­போது தான் பிரச்­சினை நெருக்­கடி நிலைக்கு சென்­றது. ஒரு மணித்­தி­யா­லத்தில் கொலை செய்­வ­தாக கொள்­ளை­யர்கள் கூறி­ய­தாக இலங்­கை­யர்கள் எமக்கு தெரி­வித்­தனர். இதன் பின்னர் நாம் அவ­ச­ர­மாக அமெ­ரிக்­காவின் உத­வியை நாடினோம். இதன் மூல­மாக கிழக்கு சோமா­லி­யாவில் தன்­னாட்சி அதி­காரம் கொண்ட புன்த்லேண்ட்  ஜனா­தி­ப­தி­யுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­தினோம். ஜனா­தி­பதி காஸ் மற்றும் அவ­ரது அர­சாங்­கத்தின் பிர­தான அதி­காரி அப்­நசீர் சோபா ஆகி­யோ­ருடன் நேர­டி­யாக தொடர்பை ஏற்­ப­டுத்தி நிலை­மை­களை விளக்­கினோம். 

துப்­பாக்கி பிர­யோ­கத்தை நிறுத்­து­மாறு புன்த்­லேண்ட ஜனா­தி­ப­தி­யிடம் கோரினோம். இலங்­கை­யர்கள் 8 பேரின் உயிர்­களை பாது­காக்க வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்பில் வலி­யு­றுத்­தினோம். இதன் பிர­காரம் துப்­பாக்கி பிர­யோகம் நிறுத்­தப்­பட்­ட­தாக கப்­பலில் இருந்­த­வர்­க­ளிடம் இருந்து  உறு­திப்­ப­டுத்­தினோம். துப்­பாக்கி பிர­யோகம் நடத்தும் பட­கு­களை அப்­பு­றப்­ப­டுத்­து­மாறும் கோரினோம். ஆனால் அவர்கள் அதற்கு இணங்­க­வில்லை . மாறாக  சற்று பின்­னோக்கி செல்­வ­தாக அறி­வித்­தனர். 

கொள்­ளை­யர்­க­ளுக்கும் கப்பல் உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் இடையில் இடம்­பெ­று­கின்ற கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு சந்­தர்ப்பம் வழங்­கு­மாறு  புன்த்­லேண்ட ஜனா­தி­ப­தி­யிடம் கேட்­டுக்­கொண்டோம்.  ஆனால் அவர்­களின் கோரிக்கை என்ன ? கப்பம் கேட்­டார்­களா ? கொடுத்­தார்­களா ? என்­பது எமக்கு அவ­சி­ய­மற்­றது. ஆனால் இலங்­கை­யர்கள் 8 பேரை பாது­காக்க வேண்­டி­யது எமது கட­மை­யா­கி­யி­ருந்­தது. 

இந்­நி­லையில்  புன்த்­லேண்ட ஜனா­தி­ப­தி­யுடன் வட்சப் ஊடாக தொடர்ந்தும் தொடர்­பு­களை மேற்­கொண்டு நிலை­மை­களை அறிந்தோம். இறு­தியில் எவ்­வி­த­மான கப்ப பணமும் வழங்­காது இரவு கப்பல் விடு­விக்­கப்­பட்­ட­தாக உத்­தி­யோ­கப்­பூர்­மற்ற தகவல் ஊடாக அறிந்து கொண்டோம். கப்பல்  புன்த்லேண்ட் துறை­மு­கத்­திற்கு வந்த பின்னர் இலங்­கை­யர்கள் 8 பேருக்கும் தேவை­யான சிகிச்­சைகள் மற்றும் உணவு என்­பன ஏற்­பாடு செய்­வ­தாக சற்று முன்னர் (நேற்று) எமக்கு அறி­வித்­தனர்.

எனவே பொறுப்­பு­ணர்­வுடன் சம்­பவம் தொடர்பில் செய்­தி­களை வெளி­யிட்­ட­மைக்­காக முதலில் அனைத்து ஊட­கங்­க­ளுக்கும்  நன்றி கூறு­கின்றோம். அதே போன்று புன்த்­லேண்ட ஜனா­தி­பதி உள்­ளிட்ட அவ­ரது அர­சாங்­கத்­திற்கும் நன்றி கூறுகின்றோம். முக்கியமாக அமெரிக்காவிற்கு நன்றிகளை கூறுகின்றோம். இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் அவசரமாக செயற்பட்டு எமக்கு  தேவையான உதவிகளை வழங்கினார். 

புன்த்லேண்ட் ஒரு நாடு  அல்ல. சோமாலியாவில் உள்ள சுயநிர்ணய உரிமை கொண்ட மாநிலம். இவர்களுடன் இராஜதந்திர உறவுகள் கிடையாது. இந்நிலையில் அவர்களுடன் எவ்வாறு பேச்சு வார்த்தை நடத்துவது.?   துப்பாக்கி பிரயோகம் நடத்திய புன்த்லேண்ட் கடற்படை எமது கடற்படை போன்றதல்ல. ஜனாதிபதியின் கட்டளையை தவிர வேறு யார் கூறியும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. இதுவே எமக்கு சாதகமானது என்றார்.