கோத்­தாவை ஜனா­தி­ப­தி­யா­க தெரி­வு­செய்­ய­வேண்டும் : தயான் ஜய­தி­லக்க

Published By: Priyatharshan

18 Mar, 2017 | 09:30 AM
image

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்த­பாய ராஜபக் ஷவை ஜனா­தி­ப­தி­யா­கவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ரா­கவும் அடுத்த தேர்­தலில் தெரிவு செய்ய வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது என்று இரா­ஜ­தந்­திரி தயான் ஜய­தி­லக்க தெரி­வித்தார். 

இலங்கை அர­சி­யலின் அடுத்த கட்ட பயணம் தொடர்பில் அவர் விப­ரிக்­கை­யி­லேயே   மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையின் அர­சி­யலில் இப்­போ­தைய நகர்­வுகள் மிகவும் மந்­த­மாக உள்­ளன.  நாம் பய­ணிக்கும் பயணம் நாட்டின் பாது­காப்பு, நாட்டின் பொரு­ளா­தாரம் மற்றும் தனி நபர் வரு­மானம் ஆகிய அனைத்­திலும் மோச­மான தாக்­கத்தை வெளிப்­ப­டுத்தும். ஆகவே மீண்டும் மாற்றம்  ஒன்றை உரு­வாக்க வேண்டும். அதற்கு மக்­களின் ஒத்­து­ழைப்பும் தூர­நோக்கு சிந்­த­னையும் அவ­சி­ய­மாகும். 

இப்­போது நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்ள தன்­மை­களை கொண்டே மீண்டும் ஆட்­சியை அமைக்க வேண்டும். இதில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவை ஜனா­தி­ப­தி­யாக நிய­மிக்க வேண்டும். அதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­மா­ராக நிய­மிக்க வேண்டும். இந்த கூட்­ட­ணியே இலங்­கைக்கு ஏற்­றதும் பொருத்­த­மா­ன­து­மான அர­சியல் பய­ணத்தை உரு­வாக்க முடியும். 

மேலும் இப்­போ­தைய தலை­மைத்­து­வத்தை நாட்­டிற்கு பொருத்­த­மான ஒன்­றாக கருத முடி­யா­துள்­ளது. இந்த தலை­மைத்­துவம் மக்­களின் பூரண  அங்­கீ­காரம் இல்­லாது ஆட்­சிக்கு வந்­துள்­ளது. ஜனா­தி­பதி தேர்தல் வெற்­றியில் ஏனைய  அனை­வரும் தமக்­கான அதி­கா­ரங்­களை தக்­க­வைத்­துக்­கொண்­டுள்­ளனர். ஆனால் மக்­களின் பூரண அங்­கீ­காரம் இவர்­க­ளுக்கு இல்லை.   அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னாலும் தனித்த ஆட்­சியை இனிமேல் கைப்­பற்ற முடி­யாது. மக்கள் இன்று ஆட்­சி­யா­ளர்கள் மீதான நம்­பிக்­கையை இழந்­துள்­ளனர். 

எதிர்­வரும் 2019ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவினால் போட்­டி­யிட முடி­யாது. ஆகவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பாளர் ரணில் விக்­கி­ரம சிங்கவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவும் போட்டியிடும் நிலையில் மக்களின் ஏகமனதான தெரிவு கோத்தபாய ராஜபக் ஷவாகவே இருக்கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21