பங்களாதேஷ் அணிக்கெதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர் விபரங்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையிலேயே 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் பூரண உடல் தகுதியில்லாமையால் இத் தொடருக்கும் உபுல் தரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குசல் ஜனித் பெரேரா மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் மீண்டும் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளமை இலங்கை அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஒருநாள் குழாம் வீரர்களின் விபரம் வருமாறு,

நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, டினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, சுரங்க லக்மால், லகிரு குமார, விகும் சஞ்சய பண்டார, திஸர பெரேரா, சஜித் பத்திரண, சீக்குகே பிரசன்ன, லக்ஷ்சன் சந்தகன் ஆகியோர் பங்களாதேஷ் அணிக்கெதிராக விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளனர்.