(பா.ருத்ரகுமார்)

மாலைதீவு நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்புளுவென்ஸா எச்1 என்1 நோய் தொற்றுக்குள்ளாகி தனியார் வைத்தியசாலையொன்றில் திடீரென உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென அந்த வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த தனியார் வைத்திய நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் பிரசாத் மெதவத்த வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.