நியூயோர்க்கில் ரயிலில் முஸ்லிம் தம்பதியரை தூஷித்த வயோதிபப் பெண்ணை வாயடைக்கச் செய்த சீனப் பெண்!

Published By: Devika

17 Mar, 2017 | 03:46 PM
image

நியூயோர்க் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த முஸ்லிம் தம்பதியரை இனவாதப் பேச்சால் தூஷித்துக்கொண்டிருந்த ஸ்பானியப் பெண்ணுக்கு எதிராக லத்தீன் பெண் ஒருவர் குரல் கொடுத்த சம்பவம் இணையத்தில் பல்லாயிரக்கணக்கானோரின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிரயாணிகள் பலர் குவிந்திருந்த ரயில் ஒன்றில், ஒரு முஸ்லிம் தம்பதியர் பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்களை ஸ்பானியப் பெண் கடுமையான இனவாதப் பேச்சுக்களால் திட்டியபடியே இருந்தார். அவரைத் தடுக்க சக பெண் பயணியொருவர் முயற்சித்தார். ஆனால் அந்த ஸ்பானியப் பெண்ணோ, “நீ அமெரிக்காவைச் சேர்ந்தவள். உனக்கு இது புரியாது. ஆனால் நான் அமெரிக்காவில் பிறந்தவள். எனக்குத்தான் அந்த வலி தெரியும்” என்று மடக்கினார்.

அப்போது, அங்கு வந்த சீன-லத்தீனியப் பெண் ஒருவர், முஸ்லிம் தம்பதியருக்கு எதிராகப் பேசிய அந்த ஸ்பானியப் பெண்ணைத் தடுத்து “நீங்கள் எந்த நாட்டவர்?” என்று கேட்டார். அதற்கு அவர், “நான் அவர்களுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ” என்று காட்டமாகச் சொன்னார்.

உடனே அந்த சீனப் பெண், “நீங்கள் யாருடனும் பேசவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தயவுசெய்து மரியாதையாகப் பேசுங்கள் என்றுதான் கூறுகிறேன். நான் இந்த நாட்டில் பிறந்தவள். எனது நாட்டிற்கு வந்திருக்கும் ஒருவரை நீங்கள் மரியாதையின்றிப் பேசுவதை அனுமதிக்க முடியாது. நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் சரி, எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் சரி. உங்களுக்குத் தெரிந்த மொழியில் இதைச் சொல்ல என்னால் முடியும். இங்கு நாம் அனைவரும் ஒன்றாகவே வாழ்கிறோம். இந்நாட்டு அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதை நீங்கள் விரும்பலாம், விரும்பாமலும் போகலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அதற்காக மற்றவர்களை மரியாதைக் குறைவாகப் பேசுவதை அனுமதிக்க முடியாது. இத்தனை வயதாகியும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் போய்விட்டது துரதிர்ஷ்டம்தான்” என்று கூறினார்.

அதற்கு அந்த ஸ்பானியப் பெண், தமது இனத்தவர் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்துவதாகக் குற்றம்சாட்டினார். அதற்கு அந்த சீனப் பெண், தமது இனத்தவர் மீதும் தாக்குதல் நடத்தப்படவே செய்கிறது என்றும், அதற்காக நாம் மற்றவர்களை மரியாதைக் குறைவாக நடத்தக்கூடாது என்றும் கூறினார்.

“பிறர் நம்மைத் தாக்குவதற்காக, நாம் மற்றவர்களைத் தாக்கத் தொடங்கினால் பிரச்சினை அதிகரிக்குமே தவிர குறையாது” என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07