(பா.ருத்ரகுமார்)

உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் பொது சுகாதாரத்தை பாதுகாக்க பொறுப்புணர்வோடு செயற்பட்டால் மட்டுமே டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும். இதனைவிடுத்து வைத்தியர்களை மாத்திரம் குறைகூறுவதால் எவ்வித நன்மையும் ஏற்படபோவதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Image result for gmoa virakesari

மேலும் டெங்கு தீவிர வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள் திருகோணமலை மாவட்டத்துக்கு தேவையான அனைத்து சுகாதார வசதிகளும் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படுவதாவும் மக்கள் டெங்கு நோய் பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அச்சங்கத்தின் இணைப்பாளர் வைத்தியர் சாய் நிரஞ்சன் தெரிவித்தார்.

கிண்ணியா உள்ளிட்ட வடமத்திய மாவட்டங்களில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.