இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகையில் 18 வீதமானவர்கள் இந்நோய்க்குள்ளாகியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் தொற்றாத நோய் என அடையாளம் காணப்பட்டுள்ள 5 நோய்களில் நீரிழிவு நோய் பிரதான இடத்தை வகிப்பதாகவும் மொத்த சனத்தொகையில் ஐவரில் ஒருவர் நீரிழிவு நோயாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகில் தற்பொழுது நீரிழிவு நோயாளர்கள் 300 மில்லியன் பேர் காணப்படுகின்றனர். ஒவ்வொரு நிமிடமும் 6 பேர் இந்நோயினால் உயிரிழந்து வருகின்றனர்.
கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 12 பேர் புதிதாக நீரிழிவு நோய்க்கு உட்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.