சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு

Published By: Raam

17 Mar, 2017 | 07:30 AM
image

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணியளவில் எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாங்கள் விடுவிக்கப்பட்டதாக குறித்த கப்பலின் தலைவர் நிக்கலஸ் அந்தோனி வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 

குறித்த கப்பல் ஒலூலா நகர கடற்பரப்புக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீட்க சோமாலிய படையினர் கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்து அதன் ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கு அறிவிக்குமாறும் கப்படன் நிக்ளஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் படையினருக்கும், சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதனையடுத்து எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கடற்கொள்ளையர்கள் கப்பலையும், எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மீட்கப்பட்ட கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை கடலோடிகளும் தற்போது சோமாலியாவின் பொசாசோ நகர துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43