கம்பஹா மாவட்டத்தில் தீவிரமடையும் டெங்கு!

Published By: Ponmalar

16 Mar, 2017 | 04:13 PM
image

கம்பஹா மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளது. மினுவாங்கொடை, மீரிகம, திவுலப்பிட்டிய, நீர்கொழும்பு, கம்பஹா ஆகிய பகுதிகளில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருவதுடன், உயிரிழப்புக்களும் இடம்பெற்று வருவதாக, வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 கடந்த வருடம் இறுதிப் பகுதியில், கம்பஹா மாவட்டத்தில் தீவிரமடைந்திருந்த டெங்கு நோய் சற்றுத் தணிந்து, மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில், இது தொடர்பிலான பரீட்சார்த்த நடவடிக்கைகள், மாவட்ட சுகாதாரப் பணிமனையினரால்,  தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 டெங்கு நோய் தாக்கத்தினால் , மினுவாங்கொடை - கல்லொழுவை பிரதேசத்திலிருந்து மாத்திரம் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இருவர் வீதம் நான்கு பேர்,  நேற்று கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடங்களை விடவும் இம்முறை டெங்கு தாக்கத்தினால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு, கம்பஹா  வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10