காச நோய் தொற்றும், காச நோயும்

Published By: Robert

16 Mar, 2017 | 04:09 PM
image

எம்மில் அனைவரும் காற்றில் கலந்திருக்கும் காச நோயை உருவாக்கும் பாக்டீரியாவை சுவாசிக்கவே செய்கிறோம். ஆனால்அவை உடலுக்குள் சென்றவுடன் எம்முடைய உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலமானது துரிதமாக செயல்பட்டு, காச நோயை பரவச் செய்யும் பாக்டீரியாவிற்கு எதிராக செயல்பட்டு, அவை முடக்கிவிடுகின்றன அல்லது உடலின் வேறு பகுதியில் பரவவிடாமல் செயலிழக்கச் செய்துவிடுகின்றன. இதனை மருத்துவர்கள் காச நோய் தொற்று என்று குறிப்பிடுகிறார்கள்.

அதே தருணத்தில் காச நோயை பரப்பும் பாக்டீரியா உடலுக்குள் சென்றபின் அவற்றை எதிர்த்து செயல்படவேண்டிய எம்முடைய நோயெதிர்ப்பு சக்தியானது செயல்படாமல், அந்த பாக்டீரியாவை உடலுக்குள் பரவச் செய்தால் அதனை காச நோய் என்று குறிப்பிடுகிறோம்.

அதனால்காச நோய் தொற்றிற்கும், காச நோய்க்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ளவேண்டும். அதே சமயத்தில் காச நோய் தாக்கியவர்களின் 10 சதவீதத்தினர் காச நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி செயல்படாததன் காரணத்தால் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அண்மைய ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருக்கிறது.

காச நோயாளி ஒருவர் தொடர் சிகிச்சைப் பெறாமல் இடையில் நிறுத்தினால், அவர் இருமினால் கூட சுமார் 10 முதல் அதற்கு மேலானவர்கள் கூட காச நோய் தொற்றிற்கு ஆளாக நேரிடும். அதனால் காச நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டும். பொதுவாக காச நோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் வரை சிகிச்சைபெறவேண்டியதிருக்கும். அதற்கு பின்னர் மீண்டும் ஒரு முறை அவர்களின் சளி பரிசோதிக்கப்பட்டு, அவர்களின் பாதிப்பு குறித்து ஆராயப்படும். அதற்கு பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப் படி செயல்பட்டால் இதனை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும். இதனைக் கண்டறிய தற்போது ‘ஜீன் எக்ஸ்பர்ட்’ என்ற கருவி அறிமுகமாகியிருக்கிறது.

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கு காச நோய் தொற்று வந்தால், அவர்கள் காச நோயாளிகளாக மாறிவிடுகிறார்கள். இவர்கள் தொடர் சிகிச்சையை புறகணித்தால் ‘மல்டி டிரக் ரெஸிஸ்டன்ஸ்’ என்ற நிலைக்கு சென்று மரணத்தை தழுவக்கூடியவர்களாக மாறிவிடுகிறார்கள். 

அதனால் எப்போதும் உங்களின் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். நோயெதிர்ப்பு சக்தி இருந்தால் எமக்கு தெரியாமல் காற்றில் கலந்திருக்கும் காச நோய் பாக்டீரியா கிருமிகள் உடலுக்குள் உட்புகுந்தாலும் அவை எதிர்த்து போராடி வீழ்த்தி எம்மை ஆரோக்கியமுடன் வைத்திருக்கும்.

டொக்டர் சௌம்யா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36