கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று 25 ஆவது நாளாக  தீர்வின்றி தொடர்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி  காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு இன்றுவரை தொடர்கிறது.

தங்களுக்கு  நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இவ்வாறு தொடர் போராட்த்தில்  ஈடுப்பட போவதாகவும், சில வேளைகளில் தங்களின் போராட்டத்தின் வடிவத்தினை மாற்றி எதிர்வரும் நாட்களில் போராட வேண்டி வரும் எனவும் கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.