சுயேச்சையான சர்வதேச விசாரணை மூலமே தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க முடியும்.  இலங்கை அரசாங்கமானது ஐ.நா.  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மா னத்தைத் தெளிவாக நிராகரித்துள்ள நிலை யில் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கியிருப்பது மனித உரிமை ஆணைக்குழுவின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34ஆவது அமர்வின் பொது விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

2015  ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஐக்­கிய நாடுகள் மினத உரி­மைகள் சபையின்  30ஃ1 தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட போது அந்தத் தீர்­மானம் குற்­ற­வியல் விசா­ர­ணை­யொன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­காக  அழைப்பு விடுக்கும் அதே­ச­மயம்இ  மேற்­படி தீர்­மானம் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபையின் இலங்கை தொடர்­பான விசா­ரணை அறிக்­கையின்  விப­ரங்­க­ளி­லான குறிப்­பி­டத்­தக்க குறை­பா­டு­களைக் குறிப்­பி­டு­வதில் உரிய கவ­னம்­செ­லுத்­த­வில்லை என நாம் அந்த சபையை எச்­ச­ரித்­தி­ருந்தோம்.

அந்தத் தீர்­மானம் உள்­நாட்டுப் பொறி­மு­றை­யொன்றின் அனைத்து நடை­முறை நோக்­கங்­க­ளுக்­கா­கவும் சில வெளி­நாட்டு ஈடு­பாட்டை வழங்­கு­வ­த­னூ­டாக நம்­பகத் தோற்­றப்­பாட்டை வழங்­கு­வதை மட்­டுமே நாடு­வ­தா­க­வுள்­ளது என நாம் தெரி­வித்தோம்.  அத்­துடன்  நாங்கள் இலங்கை அர­சாங்­கத்­துக்கு நீதியை வழங்­கு­வ­தற்­கான அர­சியல் விருப்பம் கிடை­யாது என நாம் திரும்பத் திரும்ப சுட்­டிக்­காட்­டினோம்.

எனினும்  பொறுப்புக் கூறு­வது தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட30ஃ1  தீர்­மா­னத்தின்  இந்தக் குறைந்­த­பட்ச கடப்­பா­டு­க­ளையும் தற்­போது இலங்கை அர­சாங்கம் ஏற்க உத்­தி­யோ­க­பூர்­வ­மாக மறுத்­துள்­ளது. அந்தத் தீர்­மா­னத்தை மறுப்­ப­தற்­கான முயற்­சி­க­ளுக்கு இலங்கை ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர்  தலைமை தாங்­கினர்.

அதில் அதி முக்­கிய விடயம் என்­ன­வென்றால் அந்தத் தீர்­மானம் தொடர்­பான வாய்­மொழி மூல­மான நிரா­க­ரிப்­புக்கு மேலாக அந்தத் தீர்­மா­னத்­தி­லுள்ள ஒரு கடப்­பாடும் அர­சாங்­கத்தால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை

அர­சாங்கம் அந்தத் தீர்­மா­னத்தைத் தெளி­வாக நிரா­க­ரித்து அதனை பின்­பற்றும் நோக்கம் எத­னையும் செயற்­ப­டுத்­தாத இத்­த­கைய சூழ்­சி­லையின் கீழ் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபை அத்­த­கைய அர­சாங்­கத்­துக்கு தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த மேலும் கால அவ­கா­சத்தை வழங்­கி­யி­ருப்­பது பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் பார்­வையில் அந்த சபை தொடர்­பான நம்­ப­கத்­தன்­மைக்கு கடு­மை­யான பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தா­க­வுள்­ளது.

 சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு இலங்கையை பரிந்துரை செய்வது அல்லது சர்வதேச நியாயஸ்தலமொன்றை ஸ்தாபிப்பதன் மூலம் சுயேச்சையான சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுப்பதே இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை நிலை நாட்டுவதற்கு ஒரே வழிமுறையாக அமையும் என  நாம் வலியுறுத்துகிறோம்.