கொழும்பு தாஜ் சமுத்­திரா என்று அழைக்­கப்­படும் TAL லங்கா பீ.எல்.சீ இன் இரண்­டா­வது பெரிய பங்­கா­ள­ரான த இந்­தியன் ஹோட்டல்ஸ் கம்பனி லிமிடெட் தனது உரி­மைத்­து­வத்தை விற்­பனை செய்­துள்­ளது.

கடந்த 6 ஆம் திகதி இடம் பெற்ற இக்கொடுக்கல் - வாங்­கலின் போது TAL லங்கா பீ.எல்.சீ இன் 34,375,640 பங்­கு கள் ஒவ்­வொன்றும் 25 ரூபா வீதம் IHOCO BV என்ற நிறு­வ­னத்தினால் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்ளது. இது நிறு­வ­னத்தின் மொத்த சொத்து மதிப்­புக்­களில் 24.62 வீதமாகும். இந்த கொடுக்கல் - வாங்­கலின் மொத்தப் பெறு­மதி 859.39மில்லியன் ரூபாவாகும்.