இலங்கை,  இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகள் மோதும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் வருடம் இலங்கையில் நடத்தப்படவுள்ளது.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை  முன்னிட்டு “சுதத்திரக்கிண்ணம் “ என்ற பெயரில் எதிர்வரும்  2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  15 ஆம் திகதியிலிருந்து  30 ஆம் திகதி வரை கிரிக்கெட்த் தொடர் இடம்பெறவுள்ளது.

பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் சபையின் பிரதமநிறைவேற்றதிகாரி ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.