சர்வதேச, கலப்பு நீதிமன்றுக்கு இடமில்லை : அரசாங்கம்

Published By: MD.Lucias

15 Mar, 2017 | 05:24 PM
image

(ரொபட் அன்டனி)

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்ய சர்வதேச மற்றும் கலப்பு நீதிமன்றங்களுக்கு இடமளிக்கமாட்டோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு வள பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கைக்கு  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச நீதிபதிகள் வருவதற்கு இடமளிக்கமாட்டோம். அவர்கள்  பலவந்தமாக வருவதற்கும்  இடமளிக்கமாட்டோம்.  

உள்ளக விசாரணை மூலம் நீதி வழங்கும் செயற்பாட்டை  முன்னெடுப்பதற்கு எமது நாட்டின் நீதிபதிகளுக்கு திறமை  உள்ளது.  சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அத்துடன் மனித உரிமை   செயற்பாடுகளை முன்னேற்றும் விடயத்தில் நாங்கள் நினைத்ததையே செய்வோம்  அதை எங்களுக்கு தேவையான நேரத்திலேயே செய்வோம்.

 யாரும்   எங்களுக்கு கால அட்டவணை கொடுக்க முடியாது, ஆனால் நாங்கள் சர்வதேச தரத்தின்படி இந்த செயற்பாடுகளை மேற்கொண்டு சர்வதேசத்திற்கு அறிவிப்போம். அதற்கு  இரண்டு வருடம் மூன்று வருடம்  என அவகாசம் வழங்க முடியாது.

இதேவேளை கொழும்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கண்கணாப்பு அலுவலகம்  அமைப்பதற்கும்  இடமளிக்கமாட்டோம். அவ்வாறானதொரு தீர்மானத்திற்கு இணக்கம்  வெளியிடமாட்டோம்.  நாம் கூறுவதையே  இன்று சர்வதேசம் நம்புகிறது. மாறாக புலிகள் ஆதரவு  மற்றும் ஈழ ஆதரவு அமைப்புக்கள் கூறுவதை  சர்வதேசம் ஒருபோதும் நம்பப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13