அதிகரித்துவரும் புதிய வகையினதான இதய செயலிழப்பு

Published By: Robert

15 Mar, 2017 | 01:13 PM
image

எம்மவர்களில் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழப்பவர்களில் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தை உந்தித் தள்ளும் திறன் குறைபாட்டால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இதய செயலிழப்பால் பாதிக்கப்படுவோரில் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள் இவர்கன் என்றும், 20 சதவீதத்தினர் இத்தகைய பாதிப்பின் காரணமாகவே உயிர் துறக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது.  

இதய செயல்பாட்டில் இதயத்திற்கு இரத்தத்தை உந்தித் தள்ளும் திறன் முக்கிய பங்கு வகிக்கிறது.  இத்தகைய திறன் ஒவ்வொருவரின் வயதுமற்றும் அவர்களின் உடல் எடையைப் பொறுத்து மாறுபடுகிறது. முதுமையின் காரணமாகவோ அல்லது உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காவிடிலோ இதயத்திற்கு செலுத்தப்படும் இரத்தத்தின் அளவிலும், அடர்த்தியிலும், சீராக வேகத்துடிப்பிலும் மாற்றம் உருவாகிறது. இதனால் இதயத்திற்கு செலுத்தப்படும் இரத்தத்தின் அளவு மற்றும் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தின் அளவு ஆகியவற்றில் மாறுபாடும் ஏற்படுகிறது.  இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச செல்லும் குழாய்கள் தடிமனாகிவிடுவதாலும்,  இதய தசைகளுக்கு கிடைக்கவேண்டிய ஓய்வு முழுமையாக கிடைக்காதக் காரணத்தினாலும் இவை இதயத்தின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி இதய செயலிழப்பை தோற்றுவிக்கிறது.

இதனை எக்கோகார்டியோகிராம் என்ற பரிசோதனை மூலம் கண்டறிய இயலும். சிஸ்டாலிக் ஹார்ட் பெயிலியர் என்பதைக் காட்டிலும் இது வித்தியாசமானது. இதனை டிஸ்டாலிக் ஹார்ட் பெயிலியர் என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது இதயத்திற்கு செலுத்தப்படும் இரத்தத்தால் விரியவடையவேண்டிய இதயம், இதன் மாறுபாட்டால் தேவையான அளவிற்கு விரிந்து இயங்குவதில்லை. இதனால் இதய செயலிழப்பு உருவாகிறது. 

இத்தகைய பாதிப்பை சில அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

மாடிப்படி ஏறும் போது மூச்சு திணறல் ஏற்படுவது, காலையில் எழுந்தவுடன் அசதியாக இருப்பது போன்ற உணர்வு, உடற் பயிற்சி செய்யும் போது மூச்சு திணறல் ஏற்படுவது, கணுக்கால், கால், இடுப்பு ஆகிய பகுதிகளில் வீக்கம் காணப்படுவது, இரவில் அதிகப்படியாக சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக இதய மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனையும், பரிசோதனையும் செய்து கொண்டு எவ்வகையான பாதிப்பு என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

டொக்டர் K. தாமோதரன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04