போதைப்பொருள் கடத்தல்காரர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மாபெரும் மனிதப் புதைகுழி!

Published By: Devika

15 Mar, 2017 | 12:15 PM
image

மெக்ஸிக்கோவில், போதைப்பொருள் கடத்தல்காரர்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் பாரிய மனிதப் புதைகுழியொன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கு, போதைப்பொருள் கடத்தல் கும்பலால் கொன்று புதைக்கப்பட்டதாக நம்பப்படும் சுமார் 250க்கும் மேற்பட்டவர்களின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காணாமல் போனவர்களைக் கண்டறியும் நோக்கில் சமூகச் செயற்பாட்டாளர்களின் முயற்சியின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்திலாந்திக் கடலையொட்டிய மெக்ஸிக்கோவின் பிரதான துறைமுக நகரான வெராக்ரூஸ் என்ற இடத்திலேயே இந்தப் பாரிய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 250 பேரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன், தேடுதல் நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகத் தொடர்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது மெக்ஸிக்கோவின் மட்டுமன்றி உலகின் மிகப் பெரிய மனிதப் புதைகுழியாகக் குறிப்பிடப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33