முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ  எதிர்­வரும் புதன்கிழமை சீனா­விற்கு விஜ யம் செய்­ய­வுள்ளார். சீனாவின் அழைப்பின் பேரில் செல்லும் அவர் 16 ஆம் திகதி வரையில் அங்கு தங்­கி­யி­ருப்பார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் சீன விஜ­யத்தை அவ­ரது இணைப்­பாளர் உறு­திப்­ப­டுத்­தி­ய­துடன் இந்த விஜ­ய­மா­னது மதம் சார்ந்த விஜயம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எவ்­வா­றா­யினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் இந்த விஜ­யத்தின் போது; சீன அரசின் முக்­கி­யஸ்­தர்கள் சில­ரையும் சந்­திக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இலங்­கையில் இடம்­பெற்ற ஆட்சி மாற்­றத்தின் பின்னர் சீனா­வு­ட­னான புதிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மந்த நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன. இந் நிலையில் உள்­நாட்டில் சீன அர­சினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற அபி­வி­ருத்தி திட்­டங்கள் தொடர்பில் அந்­நாட்டு பிர­தி­நி­திகள் கவ­னத்தில் கொண்­டி­ருந்­தனர்.

அதே போன்று தற்­போது இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள சீன அரசின் உயர்மட்டக் குழு துறை­முகநகர் அபி­வி­ருத்தி திட்டம் மற்றும் ஹம்­பாந்தோட்­டை துறை­முகம் என்­பவை தொடர்பில் அவ­தானம் செலுத்தி கலந்­து­ரை­யாடி வரு கின்றது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு செல்கின்றார்.