திருகோணமலை மாவட்டத்திலுள்ள 66 பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட 66 பாடசாலைகளையே தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 66 பாடசாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளமையே பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்குரிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.