தடையை மீறி 50 பேரை நாடு கடத்தும் மலேசியா..! 

Published By: Selva Loges

15 Mar, 2017 | 10:27 AM
image

மலேசியா மற்றும் வட கொரியா இடையே ஏற்பட்டுள்ள விசாத்தடை மற்றும் அரசியல் தடையை தொடர்ந்து, 50 வடகொரிய நாட்டவர்களை நாடு கடத்துவதற்கு மலேசிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

 

வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜோங் நம் கொலையால், வடகொரிய மக்களுக்கான விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய அரசு தடை செய்தது. இந்நிலையில், போர்னியோ தீவிலுள்ள சராவக் மாநிலத்தில் பணியாற்றும் 50 வடகொரிய தொழிலாளர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து நாடுகடத்தவுள்ளதாக துணை பிரதமர் அகமது ஜாகித் ஹமிதி தெரிவித்துள்ளார்.

மேலும் கிம் ஜோங் நம் கொலையுடன் தொடர்புடைய கொலையாளிகளை மலேசிய காவல்துறை தீவிரமாக தேடிவருகின்றது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வடகொரிய மக்களுக்கான விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய அரசு தடை செய்து உத்தரவிட்ட நிலையில், வடகொரிய அரசும் மலேசியாவிற்கு எதிரான விசா தடையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இரு நாட்டு தூதர்களும் பரஸ்பரமான முறையில் வெளியேற்றப்பட்டனர். அத்தோடு மலேசிய அரசின் விசாரணை முறைகளையும் வடகொரியா விமர்சித்து வருகின்றமையால் இரு நாட்டு உறவில் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது. வடகொரிய மக்கள் வெளியேறுவதற்கு தடை இருந்தபோதும், அந்நாட்டை சேர்ந்த 50 பேரை நாடு கடத்த மலேசிய அரசு தீர்மானித்துள்ளதோடு அதற்கான காரணத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17