சாரதி அனுமதி பத்திரம் கேட்ட கான்ஸ்டபிளை காரினால் மோதி ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை இழுத்துச் சென்ற பெண் : கொழும்பில் அதிர்ச்சி சம்பவம் 

Published By: Ponmalar

14 Mar, 2017 | 07:29 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாதை விதிமுறைகளை மீறிய கார் ஒன்றினை நிறுத்தி அதன் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்ட கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிளை அதே காரினால் மோதி காயப்படுத்தி, காரின் பொனட் மீது விழுந்த அவரை அதில் இருக்கத்தக்கதாகவே சுமார் ஒரு கிலோமீற்றர் வரை காரைச் செலுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நடமாடும் விபசார விடுதியொன்றினை நடத்திவரும் பெண் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் குறித்த பெண்ணை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஜயராம் டொஸ்கி உத்தரவிட்டுள்ளார். 

தெற்கு களுத்துறையைச் சேர்ந்த கீதா சியாமலீ எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 கடந்த 10 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரகரி வீதியில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்களான  உபுல், பிரதீப் ஆகியோர் போக்கு வரத்து கடமையில் இருந்துள்ளனர். இதன் போது டப்ளியூ.பி.சி.ஏ.எச். 9280 எனும் காரினை பொலிஸார் நிருத்தியுள்ளனர். அதில் 5 பெண்கள் இருந்துள்ளனர். காரினை கீதா எனும் தற்போது கைதகியுள்ள பெண்ணே செலுத்தியுள்ள நிலையில், அவரின் சாரதி அனுமதி பத்திரத்தை பொலிஸார் கோரியுள்ளனர்.

இதன் போது காரினை இயக்கிய குறித்த பெண் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளார். கார் மோதியதினால் காரின் பொனட் மீது அந்த கான்ச்டபிள் விழவே தொடர்ந்து அக்காரை அப்பெண் முன்னோக்கி வேகமாக செலுத்தி சென்றுள்ளார். இதன் போது காரின் பொனட்டில் காயத்துடன் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் காரின் இரு பக்கங்களை பிடித்தவாறு உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடியுள்ளார். இதன் போது அவ்வீதியால் வேன் ஒன்றில் வந்துள்ள கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த  மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் மன்சான் எனும் நபர், பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏதோ ஆபத்து என கருதி காரின் குறுக்காக வேனை நிறுத்தி பொலிஸ் கான்ஸ்டபிள் உபுலை காப்பாற்றியுள்ளார். 

இதன் போது காரில் இருந்த நான்கு பெண்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன் காரைச் செலுத்திய பெண் தடுக்கி விழவே அவரை பொலிஸார் கைதுச் செய்துள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

 இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில், கைதான பெண் ஒரு நடமாடும் விபசார விடுதியை வாடகைக்கு எடுக்கும் வாகனங்கலில் நடத்துபவர் எனவும், அது தொடர்பிலேயே பணத்துக்கு பெண்கள் சிலரை ஆடவருக்கு விற்பனைச் செய்ய செல்லும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மேலதிகமாக, சம்பவம் இடம்பெறும் போது காரில் ஒருந்த விபசாரிகள் என நம்பப்படும் ஏனைய பெண்களைத் தேடியும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27