கிளிநொச்சி  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 23 வது நாளாகவும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்துக்கு தென்னிலங்கையில்  இருந்து செயற்ப்படுகின்ற  அமைப்பான சுதந்திரத்திற்கான  மகளீர் அமைப்பு ஆதரவினை  வழங்கி உள்ளது  அத்துடன் , சம உரிமை இயக்கம்  மற்றும்  சமத்துவம் சமூக  நீதிக்கான மக்கள் அமைப்பு   என்பனவும் குறித்த போராட்டத்திற்கு  ஆதரவினை வழங்கும் முகமாக  கந்தசாமி கோவில்  முன்றலில் 23 வது நாளாகவும்  நடைபெற்றுக்கொண்டுள்ள போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.