கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று   11 ஆவது நாளாக தொடர்கிறது.

காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம்  உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்ற   நிலையில்,  குறித்த இப்போராட்டத்திற்கு சம உரிமை இயக்கம், சுதந்திரத்திற்கான  மகளீர்  அமைப்பு, சமத்துவம் சமூக  நீதிக்கான மக்கள் அமைப்பு என்பன ஆதரவினை  வழங்கி       அவர்களுடன்  இணைந்து  போராட்டத்தில்  ஈடுபட்டனர்.