ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்களின் நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களுடன் இணைந்து பாடல் பாடி மகிழந்திருந்த காணொளியொன்று இணையத்தளங்களில் பரவிவருகின்றது.

அண்மையில் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கிஸை சென். தோமஸ் கல்லூரி இடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது.

இப் போட்டியை பார்வையிடுவதற்காக சென்றிருந்த ரோயல் கல்லூரியின் பழையை மாணவனான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிரிக்கெட் போட்டியின் இறுதியில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் ஏனைய அமைச்சர்களுடன் இணைந்து பாடல் பாடி, நகைச்சுவையான கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்து மகிழ்ச்சியில் திளைத்திருந்ததை காணொளியில் அவதானிக்க்கூடியதாக இருந்தது.