வண்­ணாத்­தி­வில்லு எரிக்­கு­லன்­வில்லு பிர­தே­சத்தில் ஊஞ்சல் கட்­டப்­பட்­டி­ருந்த கொங்­கிரீட் தூண் உடைந்து வீழ்ந்­ததில் எட்டு வய­து­டைய சிறுமி உயி­ரி­ழந்­துள்­ளார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றுள்ள இச்­சம்­ப­வத்தில் வண்­ணாத்­தி­வில்லு பண்­டா­ர­நா­யக்கா வித்­தி­யா­ல­யத்தில் 3 ஆம் வகுப்பில் பயின்ற சுதீபா தர்­ஷனி எனும் சிறு­மியே இவ்­வாறு பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

சிறுமி தனது அயல் வீட்டைச் சேர்ந்த இரு நண்­பி­க­ளுடன் விளை­யாடிக் கொண்­டி­ருக்­கை­யி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இரண்டு கொங்­கிரீட் தூண்­களில் சாரி ஒன்­றினால் கட்­டப்­பட்ட ஊஞ்­சலில் விளை­யாடிக் கொண்­டி­ருக்­கையில் ஊஞ்சல் கட்­டப்­பட்­டி­ருந்த கொங்­கிரீட் தூண் உடைந்து வீழ்ந்­துள்­ள­து.

அதன் கீழ் அகப்­பட்டே இச்­சி­றுமி உயி­ரி­ழந்­துள்­ள­தாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரி­வித்­தனர்.

சிறு­மியை உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்­ற போதிலும் உயிரைக் காப்­பாற்ற முடி­யாது போயுள்­ளது. ­இச்­சி­று­மியின் மரணம் தொடர்­பி­லான விசா­ரணை நேற்று திங்­கட்­கி­ழமை புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் இடம்­பெற்­றமை குறிப்பிடத்தக்கது.