பசுபிக் கடலின் மேற்கு கடற்பரப்பிலுள்ள குவாம் தீவில் 5.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஆதிக்கத்திற்குட்பட்ட பசுபிக் கடலின் மேற்கு கடற்பரப்பிலுள்ள குவாம் தீவில். இன்று நிலநடுக்கமொன்று 5.5 ரிச்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடக்கு மரியானா தீவிலுள்ள, வடக்கு ரோட்டோவிலிருந்து 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கடலடித்தளத்தின் 104.கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ள குறித்த நிலநடுக்கத்தால், குவாம் தீவிலுள்ள மக்கள் அவசரமாக வீட்டிலிருந்து வெளியில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறித்த நடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.