ஐ.எஸ்.ஐ.எஸ். அடிப்படைவாதிகள் மற்றும் அந்த அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளனர் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பாகவும் அண்மையில் வெளியான சில ஊடக அறிக்கைள் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சு அவதானத்துடன் உள்ளதாக அது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

இவ்வாறான இஸ்லாமிய அரச பயங்கரவாதி (ஐ.எஸ்.ஐ.எஸ்) குழுவில் குழுக்களாக ஒன்றிணைந்து மற்றும் தொடர்புகள் சம்பந்தமாக பாதுகாப்பு படையினர் மற்றும் சகல புலனாய்வு துறையினர் 24 மணிநேர தீவிர கண்காணிப்புடன் செயற்படுகின்றனர் என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்வதோடு இது பாதுகாப்பு படையினரின் மற்றும் தேசிய புலனாய்வு தரப்பினரது பிரதான பொறுப்பாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

சில ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் முக்கிய மற்றும் அடிப்படை புலனாய்வு தகவல்களை வெளியிடுவதன் காரணமாக இவ்வாறான நபர்களை அடையாளங் கண்டு கொள்வதற்கான சந்தரப்பம் இழக்க நேர்வதுடன் இது தொடர்பில் எடுக்கப்படும் முயற்சிகள் பாதிக்கப்படும் அதேசமயம் எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தும்.

எவ்வாறாயினும், தற்பொழுது நிலவும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் எவ்வித அச்சமும் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

பாதுகாப்பு படையினருக்கு கிடைக்கப் பெறும் புலனாய்வு தகவல்கள் மிகவும் அவதானமாக ஆராய்ந்து மதீப்பீடு செய்யப்பட்டு அது தொடரபான தகவலை உறுதிப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் அதேசமயம், ஊடகங்களுக்கு அந்த தகவல்களை வழங்க முடியாதுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அச் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.