(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டின் பொருளாதாரம் முற்றாக இஸ்திரமற்ற நிலைக்கு மாறியுள்ளதாக சர்வதேச தரப்படுத்தல் முகவர் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்கத்திடம் உறுதியான பொருளாதார கொள்கையொன்று இல்லாமையே இதற்கு காரணமாகும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.