மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரி விவகாரம் தொடர்பில் இலங்கை வைத்திய சபை, உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது. 

சயிட்டம் கல்லூரி மாணவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த கல்லூரிக்கு மருத்துவப் பட்டத்தை வழங்க சட்ட ரீதி­யி­லான  அதி­காரம் உள்­ள­தாக கடந்த மாதம் தீர்ப்பளித்தது. 

அதன்­படி சைட்டம் தனியார் மருத்­துவக் கல்­லூ­ரியில் பட்டம் பெற்று வெளி­யே­று­வோரை இலங்கை மருத்­துவ சபையின் தொழில்சார் வைத்­தி­யர்­க­ளாக பதிவு செய்­ய­வேண்டும் எனவும் மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி விஜித் மலல்­கொட தலை­மையில் நீதி­பதி எஸ். துரை­ராஜா உள்­ள­டங்­கிய இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழுவே இந்த தீர்ப்பை அறி­வித்­தனர்.

சைட்டம் நிறு­வ­னத்தில் பட்டம் பெற்ற தம்மை மருத்­துவத் துறையில் பதிவு செய்ய இலங்கை மருத்­துவ சபை மறுப்­ப­தாக குற்றம் சாட்டி, அந்த தனியார் மருத்­துவக் கல்­லூ­ரியில் பட்டம் பெற்று வெளி­யே­றிய மல்­ஷானி சுர­வீர ஆரச்சி மற்றும் திலும் சூரியாராச்சி ஆகியோர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பின் போதே மேற்­படி உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இந்தநிலையில், இந்த தீர்ப்பு குறித்து இலங்கை வைத்திய சபை உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.