வவுனியாவில் இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(13)  18 ஆவது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அவசரகாலச் சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமானது இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.