கொழும்பு றோயல் கல்­லூரி மற்றும் சென்.தோமஸ் கல்­லூரி அணி­க­ளுக்­கி­டை­யி­லான 138ஆவது நீலங்­களின் சமர் என வர்­ணிக்­கப்­படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி மழை கார­ண­மாக வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வுக்கு வந்­தது.

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய றோயல் கல்­லூரி அணி தனது முதல் இன்­னிங்ஸில் 255 ஓட்­டங்­களைப் பெற்றுக் கொண்­டது. இதில் சந்­தீப (42), ஹிமேஷ் (41) ஓட்­டங்­களைப் பெற்றுக் கொண்­டனர்.

அதைத் தொடர்ந்து தனது முதல் இன்­னிங்ஸை ஆரம்­பித்த சென்.தோமஸ் கல்­லூரி அணி 9 விக்­கெட்­டுக்­களை இழந்து 357 ஓட்­டங்­களை குவித்து 102 ஓட்­டங்­களால் முன்­னிலைப் பெற்­றது.

இதில் ரவிந்து 98 ஓட்­டங்­க­ளையும், ரொமேஷ் 92 ஓட்­டங்­க­ளையும் விளா­சினர். அதைத் தொடர்ந்து இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த றோயல் கல்­லூரி அணி 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 154 ஓட்­டங்­களைப் பெற்றிருந்த வேளையில் மழை குறுக்­கிட்­டதால் ஆட்டம் நிறுத்­தப்­பட்­டது.

இதனால் சென்.தோமஸ் அணி வெற்­றி­பெறக் கூடிய  போட்­டி மழை கார­ண­மாக சம­நி­லையில் நிறை­வ­டைந்­தது. எனவே மீண்டும் ஒரு முறை டி.எஸ். சேனா­நா­யக்க கிண்­ண­மா­னது றோயல் கல்­லூ­ரி­யி­டமே கைய­ளிக்­கப்­பட்­டது.

போட்­டியின் ஆட்­ட­நா­ய­க­னாக ரொமேஷும், சிறந்த பந்­து­வீச்­சா­ள­ராக கன பெரேராஇ சிறந்த துடுப்­பாட்ட வீர­ராக ரவிந்துஇ சிறந்த களத்­த­டுப்­பா­ள­ராக மந்தில விஜேரத்ன ஆகியோர் தெரிவாகினர்.  இவர்கள் அனைவரும் சென்.தோமஸ் கல்லூரி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.