டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­களில் 400 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­து­வதே தனது அடுத்த இலக்கு என்று இலங்கை அணியின் நட்­சத்­திர இடது கை சுழற்­பந்து வீச்­சாளர் ரங்­கன ஹேரத் தெரி­வித்­துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­களில் 366 விக்­கெட்­டுக்களை வீழ்த்­தி­யுள்ள ரங்­கன ஹேரத்இ நியூ­ஸி­லாந்தின் டேனியல் வெட்­டோ­ரியின் சாத­னையை முறி­ய­டித்­துள்ளார்

இலங்கை –- பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்கு இடை­யி­லான முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடை­பெற்­றது. 

இதில் இலங்கை அணி 259 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்­றது. 2ஆ-வது இன்­னிங்ஸில் இலங்கை அணித் தலைவர் ரங்­கன ஹேரத்  59 ஓட்­டங்கள் மட்­டுமே விட்­டுக்­கொ­டுத்து 6 விக்­கெட்­டுக்­களை வீழ்த்தி வெற்­றிக்கு உறு­து­ணை­யாக இருந்தார்.

இடது கை சுழற்­பந்து வீச்­சா­ள­ரான ஹேரத் 79 டெஸ்ட் போட்­டி­களில் 366 விக்­கெட்­டுக்களை வீழ்த்­தி­யுள்ளார். இதில் 29 முறை 5 விக்­கெட்­டுக்­க­ளுக்கு அதி­க­மா­கவும் 7 முறை 10 விக்­கெட்­டுக்­க­ளுக்கு அதி­க­மா­கவும் வீழ்த்­தி­யுள்ளார்.

இதற்கு முன்னர் நியூ­ஸி­லாந்து அணியின் இடது கை சுழற்­பந்து வீச்­சாளர் டேனியல் வெட்­டோரி 113 டெஸ்ட் போட்­டி­களில் 362 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யி­ருந்தார். இதுதான் ஒரு இடது கை சுழற்­பந்து வீச்­சாளர் எடுத்த அதிக விக்­கெட்­டுக்­க­ளாக இருந்­தன. 

இந்­நி­லையில் பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான போட்­டியில் 6 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யதன் மூலம் ஹேரத் 366 விக்­கெட்­டுக்கள் வீழ்த்தி வெட்­டோ­ரியின் சாத­னையை முறி­ய­டித்­துள்ளார்.

இந்த சாதனை குறித்து ஹேரத் கூறு­கையில்,

இது ஒரு மிகப்­பெ­ரிய சாதனை என்றே கூறுவேன். ஆனால் இந்த விக்­கெட்­டுக்­களை வீழ்த்த எனக்கு ஆத­ரவு அளித்த ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் நான் கட்­டாயம் நன்றி சொல்­லி­யாக வேண்டும்.  இத்தோடு நின்று விடாது இடது கை  பந்துவீச்சாளராக 400 விக்கெட்டுக்களை வீழ்த்துவதே எனது அடுத்த இலக்கு என்றும் தெரிவித்தார்.