இந்­திய கிரிக்கெட் அணியின் பயிற்­சி­யா­ள­ராக ராகுல் டிராவிட் நிய­மிக்­கப்­ப­டக்­கூடும் என தக­வல்கள் வெளி­யாகி உள்­ளன.

 

தற்­போது பயிற்­சி­யா­ள­ராக பணி யாற்றி வரும் அனில் கும்ப்­ளே­வுக்கு பதவி உயர்வு அளிக்கும் வித­மாக இந்­திய அணியின் இயக்­கு­ந­ராக அவர் பணி­ய­மர்த்­தப்­பட வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

இந்­திய அணியின் இயக்­கு­ந­ராக செயல்­பட்ட ரவி சாஸ்­தி­ரியின் பத­விக்­காலம் கடந்த ஆண்டு முடி­வ­டைந்­தது. இதன் பின்னர் அந்த இடம் நிரப்­பப்­ப­ட­வில்லை. அந்த இடத்­துக்கு கும்ப்­ளேவை கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கி­றது. 

இது நிகழும் பட்­சத்தில் இந்­திய அணியின் முன்னாள் தலை­வரும் தற்­போது இந்­திய ஏ அணிக்கு பயிற்­சி­யா­ள­ரு­மாக இருந்­து­வரும் ராகுல் டிராவிட்இ இந்­திய அணியின் பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­ப­டலாம்.

இந்­திய கிரிக்கெட் சபையை நிர்­வ­கிக்க உச்ச நீதி­மன்­றத்தால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிர்­வா­கிகள் குழு இதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இந்த குழு­வினர் இங்­கி­லாந்து கிரிக்கெட் சபையில் உள்­ளது போன்று பயிற்­சி­யாளர் அதிகாரத் துக்கான கட்டமைப்பை இந்திய கிரிக்கெட்டிலும் ஏற்படுத்த முயற்சிகள் செய்து வருவதாகவும் தெரிவிக் கப்படுகிறது.