இத்தாலியைச் சேர்ந்த ஆண் ஒருவர் தனது மார்பு, உதடு மற்றும் கன்னம் ஆகியவற்றை பெண்ணைப் போன்று மாற்றியமைத்துள்ளதோடு தனது ஆண் உறுப்பை மட்டும் மாற்றாமல் புதியதொரு திருநங்கையாக வலம் வருகின்றார்.

குறித்த நபர் தனது உடலில் மாற்றம் செய்வதற்கு ஒரு கோடியே 8 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாவை செலவழித்துள்ளார்.

இவ்வாறு திருநங்கையாக மாறிய கணவரை தான் தற்போது சகோதரியாக ஏற்றுகொண்டுள்ளதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.

 இத்தாலி நாட்டைச் சேர்ந்த புல்வியா பெலக்ரினோ என்ற 56 வயதுடைய நபரே இவ்வாறு திருநங்கையாக மாறியுள்ளார்.

இவர் குறித்த பால்மாற்று சிகிச்சைக்காக 52 ஆயிரம் பவுண்ஸ்களை செலவிட்டுள்ளார்.

குறித்த சிகிச்சைக்காக அவர் 16 ஆண்டுகளை ஒதுக்கியுள்ளதுடன் அவர் தனது ஆணுறுப்பில் எவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை.

அவர் தனது மார்பகம், உதடு, கீழ்ப்பகுதி, மூக்கு மற்றும் கன்னம் ஆகியவற்றை பெண்ணின் உருவத்திற்கு அமைவாக மாற்றி சிகிச்சை செய்துள்ளார்.