மீனவர் விவகாரம் : இந்திய பிரதிநிதிகள் குழு அமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட உயர்மட்டத்தினருடன் பேச்சு

Published By: Robert

13 Mar, 2017 | 09:27 AM
image

(க.கமலநாதன்)

இந்திய மீனவர்கள் மீதாக துப்பாக்கிச்சூட்டில் சிக்கி உயிரிழந்த திமழக இளைஞனர் பிரிட்ஜோவின் இறுதி கிரியைகள் இன்று அல்லது நாளை இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக இந்திய இலங்கை மீனவர் நலன்புறிச் சங்கத்தின் தலைவர் எஸ்.பீ.அந்தோனிமுத்து தெரிவித்தார்.

அதநேரம் இந்த விவகாரம் குறித்து பேசுவத்றகாக இந்திய சார்பில் ஐவர் இலங்கை வரவுள்ளதுடன் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட் உயர்மட்ட பிரதிநிதிகளுடனான பலருடன் சந்திப்புக்களையும் நடத்வுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேற்படி விடயங்களை தனக்கு இந்திய இலங்கை மீனவ நலன்புரி சங்கத்தின் தலைவர் தவதாஸ் தொலைபேசி வாயிலாக அறியத்தந்தார் என குறிப்பிட்ட அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இலங்கை கடல் எல்லையில் சுட்டுக்ககொள்ளப்பட்ட 23 வயதான பிரிட்ஜோ என்ற இளைஞனின் இறுதி கிரியைகள் நாளை அல்லது நாளை மறுதினம் செய்யப்படலாம் என இந்திய இலங்கை மீனவ நலன்புரி சங்கத்தின் தலைவர் என்.தேவதாஸ்  தெரிவித்தார்.

இறுதி கிரியைகளின் பின்பு 5 பேர் கொண்ட விசேட குழுவொன்று இலங்கை வரவுள்ளது. இவர் இலங்கை கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஏனைய உயர்மட்ட பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரிவின் பேரில் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விடயம் குறித்து ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்ததை  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி அறிவுறுத்தலின் கீழ் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை நீண்ட நாட்கள் வைத்திருப்பதில் பயனில்லை அதனை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

அதன் பிரகாரம் மேற்படி இளைஞரின் இறுதி கிரியைகள் நாளை அல்லது நாளை மறுதினம் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதென இந்திய இலங்கை மீனவர் நலன்புறி சங்கத்தின் தலைவர்கள் எஸ்.பீ.அந்தோனிமுத்து கேசரிக்கு தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று யட்டியந்தோட்டை தேவாலயத்தில் மீனவர் நலன்புறி சங்கத்தின் ஆலோசகர் அந்தோனிமுத்து தலைமையில்  மேற்படி இளைஞரின் ஆத்ம சாந்திக்காக பிரார்தித்து விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06