உணவுக் கறைகளைப் போக்கும் சலவை இயந்திரங்கள்; பெனசொனிக் அறிமுகம்

Published By: Devika

11 Mar, 2017 | 01:46 PM
image

இந்திய பாவனையாளர்களின் வேண்டுகோளையடுத்து, தமது சலவை இயந்திரங்களில் ‘கறி’ கறைகளைப் போக்குவதற்கென்று தனியாக ஒரு சலவை முறையை பெனசொனிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பத்து சதவீதமானோரே சலவை இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் பலரும், சலவை இயந்திரங்கள் ஆடைகளில் பிரளும் கறிகளின் கறைகளை முழுவதுமாக நீக்குவதில்லை என்று புகார் அளித்தனர்.

இதன்மீது கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் பின்னர், ‘கறி’க் கறைக்கென்றே ஒரு தனியான சலவை முறையை பெனசொனிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தண்ணீர் விறப்படும் விதம் மற்றும் வெப்ப நிலை என்பவற்றின் அடிப்படையில் ஆடைகளில் படும் கறிக் கறைகளை நீக்க முடியும் என்று பெனசொனிக் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய வசதியுடன் கூடிய பெனசொனிக்கின் ஐயாயிரம் சலவை இயந்திரங்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் சுமார் 30 ஆயிரம் இயந்திரங்களை விற்பனை செய்துவிட பெனசொனிக் தீர்மானித்துள்ளது.

மேலும், இதே வசதியுடன் கூடிய இயந்திரங்களை ஆசியா எங்கும் வினியோகிக்கவும் பெனசொனிக் முடிவுசெய்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right