வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்யுமாறு பலஸ்தீனிய ஜனாதிபதிக்கு ட்ரம்ப் வேண்டுகோள்

Published By: Devika

11 Mar, 2017 | 12:42 PM
image

வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு பலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்ற பின் முதன்முறையாக மஹ்மூதுடன் நேற்று (10) தொலைபேசியில் தொடர்புகொண்ட ட்ரம்ப் இவ்வழைப்பை விடுத்துள்ளார்.

இதுபற்றித் தெரிவித்த அப்பாஸின் பேச்சாளர் நாபில் அபு தைனா, கூடிய விரைவில் அப்பாஸ் வெள்ளை மாளிகைக்கு வருகை தரவேண்டும் என ட்ரம்ப் அழைப்பு விடுத்ததாகவும், இதன்மூலம், இராஜதந்திர உறவுகளை மேம்படுத்த முடிவதுடன், இஸ்ரேலுடனான பிரச்சினையைத் தீர்த்து, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபுகளை எடுக்க முடியும் என்று குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை, ட்ரம்ப்பின் பேச்சாளர் சீன் ஸ்பைஸரும் உறுதிசெய்துள்ளார். பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைக்க, இஸ்ரேல் - பலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்றும், இதற்கான முழு ஒத்துழைப்பையும் அமெரிக்கா வழங்கத் தயாராக உள்ளது என்றும் தொலைபேசி மூலம் ட்ரம்ப் தெரிவித்திருப்பதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17