பிபிசி நேரலை நிகழ்ச்சியில் நிகழ்ந்த குழப்பம்! (காணொளி இணைப்பு)

Published By: Devika

11 Mar, 2017 | 10:39 AM
image

பிபிசி தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியொன்றில் பேசிக்கொண்டிருந்த புத்திஜீவி ஒருவர், தனது பிள்ளைகளின் திடீர் குறுக்கீட்டால் தர்மசங்கடத்துக்கு உள்ளான சம்பவம் தென்கொரியாவில் இடம்பெற்றது.

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களின் பேரில், தென்கொரிய ஜனாதிபதி பார்க் - ஜியுன் - ஹை நேற்று (10) பதவி விலக்கப்பட்டார். இதையடுத்து தென்கொரியாவில் கடும் வன்முறைகள் வெடித்தன. 

இந்தச் சிக்கலான நிலை தொடர்பில் தென்கொரிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் புத்திஜீவியுமான ரொபர்ட் கெல்லியிடம் பிபிசி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றை நேரலையாக நடத்திக்கொண்டிருந்தது. தனது வீட்டில் இருந்தபடி கெல்லி இந்த நேர்காணலில் கலந்துகொண்டார்.

திடீரென அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த கெல்லியின் மகள் ஆடிக்கொண்டே அவருக்கு அருகே வந்து நின்றார். இதுபற்றி அரங்கில் இருந்த செய்தியாளர் கெல்லியிடம் கூறவே, அவர் தனது மகளைப் பின்புறமாகத் தள்ள முயற்சி செய்தார்.

இது போதாதென்று, நடைவண்டியில் அமர்ந்தபடி கெல்லியின் இரண்டாவது பிள்ளையும் அறைக்குள் நுழைந்ததுடன். கெல்லியோ செய்வதறியாது திகைத்து நின்றார். 

ஓரிரு நொடிகளில், அறைக்குள் சறுக்கிக்கொண்டு நுழைந்த ஒரு பெண், உடனே இரண்டு குழந்தைகளையும் அங்கிருந்து இழுத்துச் சென்றார். நேரலையில் நிகழ்ந்த இந்தத் தடங்கலுக்கு கெல்லி வருத்தம் தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க, இந்தக் காட்சியைக் குறிப்பிட்டு இணையதளங்களில் சர்ச்சைகள் ஏற்படத் தவறவில்லை. உள்ளே நுழைந்தது ஒரு பணிப்பெண் என்றும், அவர் தனது கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை என்றும் ஒரு சாரார் கூறிவருகின்றனர்.

அதை மறுக்கும் இன்னுமொரு சாரார், உள்ளே நுழைந்தது ஆசியாவைச் சேர்ந்த பெண் என்பதால் அவரைப் பணிப்பெண் என்றும் அவர் கடமை தவறிவிட்டார் என்றும் கூறுகிறார்கள்; இதுவே மேலை நாட்டுப் பெண்ணாக இருந்திருந்தால், அவரைத் தாயார் என்று கூறுவதோடு அவரது தவறையும் மன்னித்திருப்பீர்கள் என்று விமர்சித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right