மினுவாங்கொடை - தடுகம் ஓயாவில் தனது நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

காணமல் போயுள்ளவர் பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நீரில் மூழ்கிய குறித்த இளைஞரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.