இலங்கையில் ரெவெல்லோ அறிமுகம் செய்துள்ள சீனியற்ற டார்க் சொக்லட்

Published By: Priyatharshan

10 Mar, 2017 | 11:55 AM
image

நாடு முழுவதும் உள்ள சொக்லட் விரும்பிகளை உலகத்தரம் வாய்ந்த சீனியற்ற டார்க் சொக்லட் சுவையில் மெய்மறக்கச் செய்யும் வகையில், CBL ரெவேல்லோ அண்மையில் ‘ரெவெல்லோ சீனியற்ற டார்க்’ (Revello Dark) சொக்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ‘ரெவெல்லோ சீனியற்ற சொக்லட்டானது, ஒட்டுமொத்த சொக்லட் அனுபவத்தையும் உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு உள்ளடக்கமும் சோதனைகள் மற்றும் பயிற்சிகளின் பின்னரே விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய மற்றும் ஒப்பற்ற சுவை வாடிக்கையாளருக்கு திருப்தியான, மறக்கமுடியாத விருந்தை அளிக்கிறது. CBL தொடர்ந்து வாடிக்கையாளருக்கு சர்வதேச தரத்தினாலான சொக்லட் அனுபவத்தை வழங்குவதில் புதுமைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தத் துறையில் ஆரோக்கியம் மீது அக்கறை காட்டும், சிறந்த இனிப்பு வகைகள் பல்வேறு வாடிக்கையாளர்களை கவரும் என ஆய்வு தெரிவிக்கிறது. அதனடிப்படையில், இந்த ரெவெல்லொ சீனியற்ற டார்க் சொக்லட் வாடிக்கையாளர்கள் விரும்பும் அதியுன்னத சுவையை வழங்குகிறது.

“இன்றைய வாடிக்கையாளர்கள் மத்தியில் சர்க்கரை மீதான விருப்பில் மாற்றத்தை காணக்கூடியதாகவுள்ளது. ரெவெல்லோ சீனியற்ற டார்க் சொக்லட், எமது பீரிமியம் ரெவெல்லோ தெரிவுகளின் இயற்கையான நீட்சியாகும். எந்தவித சமரமுமின்றி தங்கள் வாழ்வில் இனிப்பான விடயங்களை அனுபவிக்க விரும்பும் வாடிக்கையாளருக்கு ஏற்ற அளவுகளில், ஒப்பற்ற சுவை, மிருதுவான, க்ரீமி மற்றும் சுவை ததும்பிய சொக்லேட்டினை நாம் உருவாக்கியுள்ளோம்” என சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் குழு பொது முகாமையாளர் தேஜா பீரிஸ் தெரிவித்தார்.

“வெளிநாட்டு வர்த்தக நாமங்களை வாங்க முடியாத உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு சகாயமான வகையிலேயே இந்த ப்ரீமியம் தர ரெவெல்லோ சீனியற்ற டார்க் சொக்லட்டினை சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் சொக்லட் நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.

உள்நாட்டு சந்தையில் சீனியற்ற வெளிநாட்டு டார்க் சொக்லட் வகைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது”என மேலும் அவர் தெரிவித்தார். “குறைந்த கலோரி மற்றும் உயர் தரமான சீனியற்ற இனிப்பு வகைகளுக்கான தேவையை நிறைவேற்றும் வகையிலான புதுமையான உற்பத்திகளை நாம் உருவாக்கி வருகிறோம்” என CBL ஃபூட்ஸ் இன்டர்நெஷனல் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு முகாமையாளர் மாதவா சேனாநாயக்க தெரிவித்தார்.

ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் 8000 மாணவர்களின் ஆய்வுகளின் படி சொக்லட் உண்பவர்களின் ஆயுட்காலம் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது. கொக்கோ மூலமாக உற்பத்தி செய்யப்படும் சொக்லட்டுகளில் அன்டிஒக்ஸிடன்ட்ஸ் அதிகமாக இருப்பதாகவும், அவை இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதாகவும் சான்றுகள் உள்ளன.

கொக்கோவில் உள்ள நிட்ரிக் அமிலமானது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சொக்லட்டில் இரும்புச்சத்து அதிகமுள்ளதுடன், கடல்பாசிக்கு அடுத்தபடியாக அதிகளவில் மக்னீசியம் கொண்ட இரண்டாவது உணவுப்பொருளாக இது காணப்படுகிறது. நாளொன்றில் ஒரு அவுண்ஸ் சீனியற்ற டார்க் சொக்லட்டினை சாப்பிடுவது ஆரோக்கிய நலன்கள் அளிக்கவல்லது. நீரிழிவு நோயாளர்கள்ரூபவ் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்புச்சத்து உள்ளவர்களுக்கும் சிறந்ததாகும்.

மிகச்சிறந்த மூலப்பொருட்களை மாத்திரமே பயன்படுத்தி சுவைகள் மற்றும் தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ரெவெல்லோ சீனியற்ற டார்க் தெரிவானது சொக்லேட் விரும்பிகளுக்கு பொருத்தமான ஆரோக்கியத் தெரிவு ஆகும். ரெவெல்லோ சீனியற்ற டார்க் சொக்லட் தற்போது நாடுமுழுவதும் உள்ள சுப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பலசரக்கு கடைகளில் 50 கிராம் பகுதியொன்று 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58