(ஆர்.யசி)

யுத்தத்தில் உறவுகளை இழந்த வடக்கு, கிழக்கு தமிழ் பெண்களின் நிலைமை வேதனைக்குரியது. அவர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னோக்கி நகர்வதில் கடினமான தன்மைகள் உள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் தற்போதைய அரசாங்கமே பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை காரியாளையதில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.