(க.கமலநாதன்)

சிங்கள தாய்மார்களை இலக்கு வைத்து அரச சார்பற்ற நிறுனங்கள் இரண்டு கருக்கலைப்பு மாபியாவை முன்னெடுவத்து வருகின்றதென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பின் ஜா-எல, கொட்டாஞசேனை ஆகிய இடங்களிலும்  ஹட்டன் உள்ளிட்ட நாட்டின் 11 இடங்களின் இந் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிருலப்பணையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .