(க.கமலநாதன்)

அண்மையில் சர்ச்சைக்கு உள்ளான அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் குறித்த இறுதி தீர்மானம் ஓரிரு வாரத்தில் அறிவிப்படவுள்ளது. அதற்கான  அமைச்சரவை பத்திரமும் விரைவில் சமர்பிக்கப்படுமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

அதேநேரம் கடந்த காலத்தில் நஷ்டமீட்டி வந்த திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்களும் தற்போது சிறிதளவு லாபமீட்ட தொடங்கியுள்ளதென்றும்  அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது முறைமுக அபிவிருத்தி அதிகாரசபையாக நாம் பல வெற்றிகளை பெற்றுக்கொண்டுள்ளோம். மக்களுக்கு அது குறித்து அறிவிக்க வேண்டியுள்ளது குறிப்பாக நாம் 2016 ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட வருமானமாக 44 பில்லியன் ரூபாய் வருமானத்தினை பெற்றுக்கொண்டுள்ளோம்.

அதில் 11 பில்லியன் ரூபாய் தேரிய லாபமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீட்டளவில் பார்க்கையில் 83 வீத வளர்ச்சி தொழிலாளர்களுக்கான அனைத்து சலுகைகளையும் முறையாக வழங்கியும் எம்மால் இந்த லாபத்தினை ஈட்டிக்கொள்ள முடிந்துள்ளது. 

நாம் நாட்டின் ஆட்சி பொறுப்புக்களை ஏற்ற போது காலி மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் பெரும் நஷ்டமீட்டி வந்தன. தற்போது அவ்விரு துறைமுகங்களுமே லாபமீட்டு துறைமுகங்களாக மாறியுள்ளன.

அந்த துறைமுகங்களை வழிநடத்தும் செயற்பாடுகளில் இருந்த ஊழல் மோசடி செயற்பாடுகளை கட்டுப்படுத்தியமைனாலேயே இன்று லாபமீட்ட முடிந்துள்ளது. அண்மையில் போராட்டங்களில் ஈடுபட்ட தொழிற்சங்களை சேர்ந்த தலைவர்களுக்கும் இதனுடன் தொடர்புள்ளது. எவ்வாறாயினும் இன்று மேற்படி இரு துறைமுகங்களும் லாபமீட்டும் துறைமுகங்களாக மாறியுள்ளன.

அதேபால் அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் அண்மையில் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அதுகுறித்த இறுதி தீர்மானதம் ஓரிரு வாரங்களுக்குள் எடுக்கப்படும் விரைவில் அது தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்றும் சமர்பிக்கப்படவுள்ளது என்றார்.